Enjoy Enjaami Lyrics - குக்கூ குக்கூ தாத்தா தாத்தா களவெட்டி - Dhee ft. Arivu - Enjoy Enjaami (Prod. Santhosh Narayanan)


குக்கூ குக்கூ

தாத்தா தாத்தா களவெட்டி... குக்கூ குக்கூ

பொந்துல யாரு மீன் கொத்தி... குக்கூ குக்கூ

தண்ணியில் ஓடும் தவளைக்கி... குக்கூ குக்கூ

கம்பளி பூச்சி தங்கச்சி


அல்லி மலர்க்கொடி அங்கதமே

ஒட்டார ஒட்டார சந்தனமே

முல்ல மலர்க்கொடி முத்தாரமே

எங்கூரு எங்கூரு குத்தாலமே


சுருக்கு பையம்மா வெத்தலை மடையம்மா

சொமந்த கையம்மா மத்தளம் கொட்டுயம்மா

தாயம்மா தாயம்மா என்ன பண்ண மாயம்மா

வள்ளியம்மா பேராண்டி சங்கதிய கூறேண்டி

கண்ணாடிய காணான்டி இந்தர்ரா பேராண்டி..


அன்னக்கிளி அன்னக்கிளி அடி ஆலமரக்கெள வண்ணக்கிளி

நல்லபடி வாழச்சொல்லி இந்த மண்ண கொடுத்தானே பூர்வகுடி

கம்மங்கர காணியெல்லாம் பாடித்திரிஞ்சானே ஆதிக்குடி

நாயி நரி பூனைக்கும்தான் இந்த ஏரி கொளம் கூட சொந்தமடி


எஞ்சாயி எஞ்சாமி வாங்கோ வாங்கோ ஒன்னாகி

அம்மா ஏ அம்பாரி இந்தா இந்தா மும்மாரி


எஞ்சாயி எஞ்சாமி வாங்கோ வாங்கோ ஒன்னாகி

அம்பா ஏ அம்பாரி இந்தா இந்தா மும்மாரி


குக்கூ குக்கூ

முட்டைய போடும் கோழிக்கு... குக்கூ குக்கூ

ஒப்பன யாரு மயிலுக்கு... குக்கூ குக்கூ

பச்சைய பூசும் பாசிக்கு... குக்கூ குக்கூ

குச்சிய அடுக்குன கூட்டுக்கு


பாடுபட்ட மக்கா வரப்பு மேட்டுக்காரா

வேர்வத்தண்ணி சொக்கா மினுக்கு நாட்டுக்காரா

ஆக்காட்டி கருப்பட்டி ஊதங்கொழு மண்ணுச்சட்டி

ஆத்தோரம் கூடுகட்டி ஆரம்பிச்ச நாகரீகம்

ஜன் ஜன ஜனக்கு ஜன மக்களே ஹே

உப்புக்கு சப்பு கொட்டி முட்டைக்குள்ள சத்துக்கொட்டு

அடக்கி ரத்தங்கொட்டு கிட்டிப்புள்ளு வெட்டு வெட்டு


நான் அஞ்சு மரம் வளர்த்தேன்... அழகான தோட்டம் வெச்சேன்

தோட்டம் செழிச்சாலும்... என் தொண்டை நனையலேயே


கடலே.. கரையே..

வனமே.. சனமே..

நிலமே.. குளமே..

இடமே.. தடமே..


எஞ்சாயி எஞ்சாமி வாங்கோ வாங்கோ ஒன்னாகி

அம்பாயி அம்பாரி இந்தா இந்தா மும்மாரி


எஞ்சாயி எஞ்சாமி வாங்கோ வாங்கோ ஒன்னாகி

அம்பா ஏ அம்பாரி இந்தா இந்தா மும்மாரி


பாட்டன் பூட்டன் காத்த பூமி 

ஆட்டம் போட்டு காட்டும் சாமி

ராட்டினந்தா சுத்தி வந்தா சேவ கூவுச்சு

அது போட்டு வச்ச எச்சம் தானே காடா மாறுச்சு

நம்ம நாடா மாறுச்சு

இந்த வீடா மாறுச்சு


என்ன கொற என்ன கொற என் சீனி கரும்புக்கு என்ன கொற

என்ன கொற என்ன கொற என் செல்ல பேராண்டிக்கு என்ன கொற


பந்தலுல பாவக்கா... பந்தலுல பாவக்கா

வெதக்கல்லு விட்டுருக்கு... அது வெதக்கல்லு விட்டுருக்கு

அப்பன் ஆத்தா விட்டதுங்க... அப்பன் ஆத்தா விட்டதுங்க


எஞ்சாயி எஞ்சாமி வாங்கோ வாங்கோ ஒன்னாகி

அம்பாயி அம்பாரி இந்தா இந்தா மும்மாரி


எஞ்சாயி எஞ்சாமி வாங்கோ வாங்கோ ஒன்னாகி

அம்பா ஏ அம்பாரி இந்தா இந்தா மும்மாரி


எஞ்சாயி எஞ்சாமி வாங்கோ வாங்கோ ஒன்னாகி

அம்பா ஏ அம்பாரி இந்தா இந்தா மும்மாரி


எஞ்சாயி எஞ்சாமி வாங்கோ வாங்கோ ஒன்னாகி

அம்பா ஏ அம்பாரி இந்தா இந்தா மும்மாரி


என் கடலே.. கரையே..

வனமே.. குனமே..

நிலமே.. குளமே..

இடமே.. தடமே..

குக்கூ குக்கூ


Dhee ft. Arivu - Enjoy Enjaami (Prod. Santhosh Narayanan)

Enjoy Enjaami Song Lyrics in Tamil







Next Post Previous Post
No Comment
Add Comment
comment url